Tuesday, December 14, 2010

வாருங்கள் வளமான சமுதாயத்தை உருவாக்குவோம் !!

வல்லரசு இநதியா... ஒவ்வொரு இந்தியனின் கனவு.. கனவு காணத்தான் சொன்னார்கள், செயல் படத்  தேவையில்லை என்ற தவறான நினைப்பு.. நிற்க.குற்றம் சொன்னது போதும். இருள் தான் என்று தெரிந்தும், என் அங்கேயே பார்வை செலுத்த வேண்டும்?  ஒளி தெரியும் பக்கம் திரும்புவோம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் , ஜகத்தினை அழித்திடுவோம்..  மஹா கவியின் வாக்கு..அன்ன சத்திரம் ஆயிரம் அமைப்பதை காட்டிலும் ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் உயர்வு என்று சொன்னதும் அதே பாரதி தான்...வல்லரசாவது உச்சாணிக்கொம்பு... படி கட்டுகளில் ஒன்று  படிப்பறிவிப்பது..  கல்விக்கும் காசுக்கும் கை கோர்த்து விட்டு  படி கட்டுகளை தகர்த்துவிட்டால் உயர்வை அடைவது எப்படி? சமீபத்தில் வலைத்தளத்திலும் , சிலரின் மின்னஞ்சல் பெட்டிகளிலும் உலவிய ஒரு மின்னஞ்சல் சொல்லும் செய்தி:  இந்தியாவை அடிமை படுத்த இயலாத ஆங்கிலேயர்களுக்காக ,  மெக்காலே  தேர்ந்தெடுத்த கடைசி ஆயுதம் கல்விமுறை மாற்றம்.. அடிமைப்பட்டது இந்தியா..           இன்று நம் தலை விதியை நாமே எழுதிக்கொள்ளும் வாய்ப்பு இருந்தும் அடித்தல் திருத்தல்களாய் சில  தவறுகள், பல தப்புகள்... சாதி மற்றும்  பொருளாதாரத்தை ஆதாரமாக கொண்ட கல்வி முறை தான் வீழ்ச்சிக்கு சாட்சி. இளைய சமுதாயமான நமக்கு இதனை அழிக்கும் கடமை உண்டு, அழிக்க முடியவில்லை என்றால் கவலை வேண்டாம்..  எதிர்த்து போராட கை  கொடுப்போம், எந்த மாற்றமும் ஒரே நாளில் நிகழ்வதில்லை, ஆரம்பம் வேண்டும்.. தொடங்குவோம், பலர் தொடர்வார்கள்... சரி செய்ய நினைப்பவர்களுக்கு, பேசுபவர்களுக்கு  பாராட்டுகள்.. அதையும் தாண்டி முயற்சிப்பவர்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகளுடன் வாழ்த்துக்கள்.. சாதனை என்று பாராட்டு தேவை இல்லை.. கடமை என்று கை கொடுப்போம்..விதைகள் சிறிது தான்;மரத்தை ஒளித்து வைத்திருக்கின்றன.. கல் உருவமற்றது தான்;கண் கவரும் சிற்பங்களை தருகின்றன..விதைகளும் கற்களும் இறைந்து கிடக்கும் பூமி..விவசாயிகளும்  சிற்பிகளும் தேவை...சிற்பமாய்  இந்தியாவை செதுக்க முன் வந்திருக்கும்..சிற்பிகள்..அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் !!

No comments:

Post a Comment